Monday 10 July 2017

சமூக வலைதள அடிமைகள்

வாசிப்பை நேசிப்போம்

அன்பு நண்பர்களே
அழகு சகோதரிகளே

எனக்கு தோன்றிய
ஒரு சின்ன விஷயத்தை
உங்க கிட்ட சொல்லனும்ன்னு ஆசைப்படுறேன்

அந்த விஷயத்தை
நல்லதா எடுத்துக்கிறதும்
கெட்டதா எடுத்துகிறதும்

பின்பற்றுவதும்
பின்பற்றாமல் கடந்து போகுறதும்

ஓட்டுறதும் அல்லது பாராட்டுறதும்

உங்களோட மன எண்ண ஓட்டங்களை பொறுத்தது

சரி இப்போ மேட்டர் க்கு போகலாம்
விஷயம்ன்னு சொல்லி போர் அடிக்குது
அதான் தூயதமிழ்ல மேட்டர் க்கு போகலாம்ன்னு சொல்றேன்

இப்போ ஒரு புது படம் பார்க்குறோம்

அந்த படத்துல உள்ள விஷங்களை அலசி ஆராய்ந்து
நல்லா இருந்தா பாராட்டியும்
நல்லா இல்லைன்னா கழுவி கழுவி ஊத்தியும்
அந்த படத்து கூடவே வாழ்ந்து
வாழ்க்கையை(நேரம்) வீணா கழிக்கிறோம்

ஒரு படம் பார்த்தா
அந்த படத்துல வேலை பார்க்கும்

இங்க வேலை ன்னு சொல்றது
அவங்க வேலை

அதாவது இயக்கம் நடிப்பு தயாரிப்பு இசை நடனம் ன்னு
நம்ம எப்டி நம்ம வேலையை செய்றமோ

அதே மாதிரி

அவங்க அவங்க வேலையை செய்றாங்க
நம்ம வேலைய கெடுத்து சிலபேர் வேலை இல்லாத பிரேக் டைம் ல
பார்த்த சினிமாவுல அவங்க பார்த்த வேலைய

நமக்கு பிடிச்சவங்க வேலையை(நடிப்பு,இயக்கம்) பாராட்டியும்
நமக்கு பிடிக்காதவங்களோட வேலையை(நடிப்பு,இயக்கம்) திட்டியும்

மணிகணக்கா அந்த படத்தை பத்தி விவாதம் பண்ணி
நேரத்தை வீணாக்குறோம்

இது தான் எங்க வேலை
இதுதான் எங்க பொழுதுபோக்கு ன்னு நினைக்குற ஆளுங்க
தயவுசெய்து இதோட இந்த பக்கத்தை க்ளோஸ் பண்ணிட்டு
நீங்க உங்க வேலையை தொடர்ந்து பார்க்கலாம்
இந்த கட்டுரை உங்களுக்கானது இல்ல

இது வரைக்கும் படிச்சதுக்கு நன்றி _/\_

நீங்க சொல்றது சரிதான்
எங்களுக்கே இது தெரியுது ஆனா எங்கள எப்டி மாத்திக்கிறதுன்னு
எங்களுக்கு தெரியலைன்னு சொல்றவங்க மட்டும்
இத தொடர்ந்து படிங்க கண்டிப்பா உங்க மாற்றத்துக்கு
இது யூஸ் ஆகும்ன்னு நினைக்கிறேன்

ஏன்னா உங்களுக்கு வச்ச முதல் டெஸ்ட்லையே
நீங்க பாஸ் பண்ணி முன்னேறிடீங்க

உங்களால முடியாததுன்னு இங்க ஏதும் இருக்காது
நான் சொல்லப்போறதும்
உங்களுக்கு சுலபமானதாதான் இருக்கும்

"சமூக வலைத்தளம்"

மத்த எந்த வலையில விழுந்தாலும் தப்பிக்கலாம்
இந்த வலை யில
விழுந்தா விழுந்ததுதான்

“இது ஒரு வழி பாதை வந்தா திரும்பி போக முடியாது”

நான் உங்கள திரும்பி போக சொல்லல இனிமேல்
சமுக வலைத்தளம் யூஸ் பண்ண வேணாம்ன்னும் சொல்ல வரல
(வேற என்ன தான்டா சொல்ல வர்ற சொல்லிதொலடா ன்னு
உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது) சொல்றேன்.

உங்க நேரத்தை இப்டி வீணாக்காம
புத்தகம் வாசிங்கன்னு சொல்றேன்

ஒரு படம் பார்த்தது மணி கணக்கா விவாதம் பண்ணாம
ஒரு நல்ல புத்தகம் வாசிச்சு
அத பத்தி மணிகணக்கா ஏன்
வருஷ கணக்கா கூட விவாதம் பண்ணுங்க
உங்க அறிவு விரிவடையும்
(அதுக்காக உங்களுக்கு அறிவு இல்லைன்னு சொல்ல வரல அறிவு மேலும் அதிகமாகும்)

உங்க விவாதங்கள பார்ப்பவங்களுக்கும்
அந்த புத்தகம் வாசிக்கனும்ன்னு தோணும்

சினிமாவுக்கு விமர்சனம் எழுதுற நேரத்துல
நீங்க வாசிச்ச புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுங்க மார்க் போடுங்க
அந்த புத்தகம்ல உள்ள நல்லத ஷேர் பண்ணுங்க
அது நாவல்,
அந்தரங்கம்
அரசியல்
அறிவியல்
அழகுக் குறிப்பு
ஆன்மீக நாவல்
ஆன்மீகம்
இயற்கை மருத்துவம்
இயல்-இசை-நாடகம்
இலக்கணம்
இலக்கியம்
இல்லறம்
ஈழம்
உளவியல்
கடிதங்கள்
கட்டுரைகள்
கதைகள்
கம்யூனிசம்
கல்வி
கவிதைகள்
குறுநாவல்
சட்டம்
சமூக நாவல்
சமையல்
சரித்திர நாவல்
சிந்தனைகள்
சினிமா
சிறுகதைகள்
சிறுவர்களுக்காக
சுய முன்னேற்றம்
ஜோக்ஸ்
ஜோதிடம்
தத்துவம்
தமிழ்மொழி
திரைகதை-வசனம்
தொழில்
தொழில்நுட்பம்
நாடகம்
நாவல்
நிர்வாகம்
நீதிகதைகள்
பக்திநூல்கள்
பயணக் கட்டுரை
பழமொழிகள்
பொது அறிவு
பொன்மொழிகள்
போட்டித்தேர்வுகள்
மருத்துவம்
மொழிபெயர்ப்பு
யோகா
வரலாறு
வரலாற்று நாவல்
வர்த்தகம்
வாழ்க்கை வரலாறு
விளையாட்டு
விவசாயம்
வேலைவாய்ப்பு இதுல உங்களுக்கு பிடிச்ச
எந்த புத்தகமா இருந்தாலும் பரவாயில்லை

வெளிப்படையா சொல்லனும்ன்னா
சினிமா என்ற மாய உலகத்தை ரசிச்சு
சினிமாக்கார்களை கொண்டாடாம

நிஜ உலகத்தை பிரதிபலிக்கும் புத்தகங்களை வாசிச்சு
எழுத்தாளர்களை கொண்டாடுங்க

நான் சொல்ல வந்த விஷயமும் இதுதான்

இதுவரைக்கும் நீங்க வீணாக்கிய நேரங்கள்
திரும்ப கிடைக்கப்போறது கிடையாது

இனிமேல் உங்க கைல இருக்கும் நேரத்தை
நான் சொன்ன விதம்ல யூஸ் பண்ணிப்பாருங்க

உங்களால உங்கள பாலோ பண்றவங்க முதல்ல மாறுவாங்க அப்றோம் அவங்கள பாலோ பண்றவங்க மாறுவாங்க

உங்களுக்கு பின்னாடி இருக்கவங்க மாறுனா
அதுக்கு விதை போட்டது நீங்க.

உங்களால முடியும்ன்னு உங்கள நம்பி முயற்சி பண்ணுங்க

கண்டிப்பா உங்கள பாலோ பண்றவங்க
வாழ்க்கையில மாற்றத்தை நீங்க உருவாக்கலாம்
(என்ன பாலோ பண்றவன் எப்டி நாசமா போனா
எனக்கு என்னன்னு சொல்லப்பிடாது)

நான் சினிமாவ வெறுப்பவன் இல்ல
என்னைய பாலோ பண்றவங்களுக்கு என்ன பத்தி நல்லா தெரியும்
(என்ன பத்தி விளக்கம் குடுக்க இத நான் எழுதல)

சினிமாவை பார்த்து கடந்து போய்டுங்க
அத பத்தி விவாதிக்க அதிக நேரம் எடுத்துக்காதீங்க

சினிமாவுல உள்ளவங்கள அதிகம் கொண்டாடாம
எழுத்தாளர்களை கொண்டாடுங்க PDF ல டவுன்லோட் பண்ணி வாசிக்காம

முடிஞ்ச அளவுக்கு புத்தகமா வாங்கி வாசிச்சு
வீட்டுல ஒரு நூலகத்தை உருவாக்குங்க

நம்ம அப்பா நமக்கு நூலகம் குடுக்கலைன்னாலும்
நமக்கு அடுத்து வர்ற நம்ம குழந்தைகளுக்கு
நம்ம வீட்டுல ஒரு நூலகம் குடுப்போமே

இவ்ளோ நேரம் நான் எழுதிய இதையே
பொறுமையா படிச்ச உங்களால
பெரிய பெரிய எழுத்தாளர்கள் எழுதியதை படிக்கிறதுல
ஒரு சிரமமும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.

இத படிச்ச அப்றோம்
நீ பெரிய ஒழுக்கமா ன்னு கேக்கலாம்

நானும் சமூகவலைத்தளத்துக்கு அடிமை இருந்தவன்தான்
இப்போவும் இருக்கேன்

ஆனா முதல்ல மாதிரி இல்ல

இப்போ கொஞ்சம் கொஞ்சமா
என்ன நானே மாத்திகிட்டேன் நினைக்கிறேன்

இத எழுதுறதுக்கு முன்னாடியே

ரொம்ப வருஷம் வாசிப்பு பழக்கம் இருந்தும்
என்ன மாதிரி சமூக வலைத்தளத்துக்கு
அடிமையாகி வாசிப்பு பழக்கத்தை
நிறுத்தி இருந்த
ஒரு அஞ்சு நண்பர்கள்

இப்போ என்னால மறுபடியும் புத்தகம் வாசிக்கிறாங்க
அது பெருமையா இருக்கு

இத படிக்கிறது மூலமா இன்னும் சில நண்பர்களுக்கு
இந்த பழக்கம் உருவாகலாம்

சொல்ல முடியாது உங்க கற்பனை திறன் மூலமா
நீங்க திடீர்ன்னு எழுத்தாளரா கூட உருவாகலாம்

அந்த நம்பிக்கையில இத எழுதி இருக்கேன்
முயற்சி பண்ணுங்க உங்களால முடியும்.

நல்லதே நினைப்போம்!! நல்லதே நடக்கும் !!!

100 RT வாங்குற நேரத்துல
எனக்காக இத பொறுமையா வாசிச்சதுக்கு

உங்களுக்கு ரொம்ப நன்றி _/\_

என்றும் உங்கள் அன்புடன் விகடகவி (என்ற) ரமேஷ் _/\_

(பின் குறிப்பு : காதலிக்கிறவங்களுக்கு இந்த கட்டுரை விதி விளக்கு
ஏன்னா அவங்க எல்லாம் வேற லெவல்)

Sunday 11 June 2017

உங்க ட்விட்டுக்கு அதிக RT கிடைக்க சில வழிகள்

எல்லாருக்கும் வணக்கம் _/\_

ட்விட்டரில் பிரபலம் ஆவது எப்படி ன்ற
என்னோட பழைய டூலா வ படிச்சுட்டு
நிறைய நண்பர்கள் பாராட்டுனாங்க
அந்த பாராட்டு அந்த டூலா வோட வெற்றிதான்
எனக்கு இந்த டூலா எழுத தூண்டுதலா இருந்துச்சு
(ரொம்ப ஓவரா இருக்குடான்னு நீங்க நினைக்கிறது புரியுது)

அந்த நண்பர்களுக்கு இந்த டூலா வ சமர்ப்பிக்கிறேன் _/\_

RT இந்த ரெண்டு எழுத்து தான்
இங்க பலபேரோட உயிர் துடிப்பா இருக்கு
பெரிய பிரபலங்கள கூட இந்த RT வெறியால சில்றதனம் பண்ணுவாங்க
இந்த RT வெறி தான் அவங்களையும்
குண்டக்க மண்டக்க எழுத வைக்குது

நல்லா பழகிய நண்பன்
ட்விட் லிங்க் DM பண்ணி RT பண்ண சொல்லுவான்
RT பண்ண மாட்டேன்னு நீங்க சொன்னா
அவ்ளோ நாள் அன்பா இருந்த நண்பனோட இன்னொரு
கேவலமான முகத்தை நீங்க பார்ப்பீங்க
(இந்த அனுபவம் எனக்கும் இருக்கு)

இத ஏன் சொல்றேன்னா
இந்த மாதிரி இருக்க ஒரு ஆள்
இத படிச்சு திருந்தினா
அது போதும் எனக்கு

நட்புங்கறது அழகான விஷயம்
அத இந்த மாதிரி RT பண்ணலங்றதுக்காக
தூக்கி எறிஞ்சுட்டு போறது மனசுக்கு கஷ்டமா இருக்கும்
RT பண்றதும் பண்ணாததும் அவர் அவர் விருப்பம்
RT க்காக போலியா நட்பா பழகுறது எதுக்கு?? அது வேண்டாமே?
(அந்த பீலிங் அடுத்த நட்பு கிடைக்கிற வரைக்கும்தான்)

நட்புக்கு எந்த பாதிப்பும் இல்லாம
உங்க ட்விட்டுக்கு அதிக RT வாங்குவது எப்படி ன்னு சொல்லத்தான் இந்த டூலா

சரி இப்போ உங்க ட்விட்டுக்கு அதிக RT கிடைக்க
சில டிப்ஸ் சொல்றேன்
இத பாலோ பண்ணுங்க கண்டிப்பா உபயோகப்படும்

உங்க ட்விட்டுக்கு அதிக RT கிடைக்க முதல் வழி
நீங்க நல்லா எழுதணும் அப்டி இல்லைன்னா
நல்லா எழுதுறவங்களை பாலோ பண்ணி
அவங்க எழுதுற விதத்தை அப்டியே காப்பி பேஸ்ட் பண்ணாம
அத ஆல்ட்டர் பண்ணும் வித்தை தெரிஞ்சுக்கணும்

உதாரணத்துக்கு

"சென்னை விமான நிலையத்தில் 1.34 கோடி 2000 நோட்டு பறிமுதல்!
#பேங் ல மட்டும் பணம் கிடைக்கவே மாட்டேங்குது"

இப்டி ஒருத்தர் எழுதுனா அதுல மேல இருக்க மேட்டர மட்டும் காப்பி பண்ணிட்டு
கீழ இருக்க மேட்டர்ல கொஞ்சம் உங்களுக்கு தெரிஞ்சத
ரெண்டு வார்த்தைகளை சேர்த்து பட்டி டிங்கரிங் பண்ணி எழுத தெரியனும்

இந்த மாதிரி 👇👇👇

"சென்னை விமான நிலையத்தில் 1.34 கோடி 2000 நோட்டு பறிமுதல்!
#பேங் ATM தவிர மத்த எல்லா இடத்துலையும்
புது ரூபாய் நோட்டுக்கள் கிடைக்குது"

நீங்க எழுதுற விதத்துல தான் இருக்கு
உங்க ட்விட்டுக்கு கிடைக்கும் RT எண்ணிக்கை
வலைபாயும் அங்கீகாரம்
நண்பர்கள் பாராட்டு எல்லாமே

இது முழுக்க முழுக்க உங்க திறமையை சேர்ந்தது
இதுல வெளி ஆளுங்களுக்கு இடமே இல்ல.

அடுத்து எனக்கு இவ்ளோ திறமை எல்லாம் இல்லைங்க
ஆனா என் ட்விட்டுக்கு அதிக RT கிடைக்கணும்
அதுக்கு வழி சொல்லுங்கன்னு
சொல்ற ஆளுங்களுக்கு

இந்த வழி கொஞ்சம் கேவலமானது
இதுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுமே இருக்க கூடாது
ஏன்னா இந்த வழிய யூஸ் பண்றவங்கள கெட்ட வார்த்தையில திட்டுவானுங்க
நானே நிறையபேர திட்டிருக்கேன் அது என்ன வழின்னா?

நீங்க ட்விட் போட்டதும் அது நல்லா இருந்தா தானா RT கிடைக்கும்
அந்த திறமை இல்லாத ஆளுங்களுக்கு தான இந்த வழி
சோ அந்த ட்விட்ட பார்த்தும் பார்க்காம போன
உங்க நண்பர்கள் எல்லாருக்கும் சிசி போடணும்
சிலபேர் உங்க தொல்லைய பொறுத்துட்டு RT பண்ணுவாங்க
பலபேர் திட்டு வாங்க அதை எல்லாம் சகிச்சுக்கனும்

ரோஷபட்டா RT கிடைக்காது

எனக்கு தெரிஞ்ச ரெண்டுபேர் இப்டித்தான் இருந்தானுங்க
அதுல ஒருத்தன் திருந்திட்டான்
இன்னொருத்தன் இன்னும் இப்டிதான் பண்றான்
ஒரு நாளைக்கு ஒன்னு ரெண்டு ட்விட் தான் போடுவான்
அந்த ட்விட்ட தன் நண்பர்கள் எல்லாருக்கும்
மெனக்கெட்டு சிசி போட்டு RT விளுதான்னு உக்கார்ந்து எண்ணிட்டு இருப்பான்
RT பண்ணவங்க போக மீதி இருக்க ஆளுங்களுக்கு மறுபடியும் சிசி போடுவான்

அவன நினைச்சா சிரிப்புதான் வரும்

அஜித் ரசிகர்களும் கிட்ட தட்ட இவன மாதிரிதான்
இவன் சிசி போடுறான் ஆனா அவனுங்க
விஜய் பத்தி லாஜிக்கே இல்லாம எதையாவது எழுதி
RT பிச்சை எடுப்பானுங்க
(அஜித் ரசிகர்கள பத்தி பேசணும்ன்னா அதுக்கு தனியா ஒரு டூலா எழுதணும்
அத இன்னொருநாள் எழுதுறேன்)

இப்போ அடுத்த வழிய சொல்றேன்
இந்த வழி கொஞ்சம் ரிஸ்க் ஆனது

சினிமா பிரபலங்கள் போடுற ட்விட்டுக்கு
டைமிங்ல ரிப்ளே பண்ணி கலாய்க்கணும்
அந்த கலாய் அவங்க மனசு புண்படும்படியா இருக்க கூடாது
எல்லாரும் ரசிக்கும் படியா இருக்கனும்
அப்டி இருந்தா கண்டிப்பா RT ஆகும்

சில்றதனம் பண்ற பிரபலங்களை திட்டி ரிப்ளே பண்ணாலும்
RT குவியும் ஆனா அதுக்கு அப்றோம் நடக்கும்
விபரீத பின் விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல

அடுத்து நேரம் பார்த்து ட்விட் போடணும்
அப்டி ட்விட் போட்டாலும் RT ஆகும்

உதாரணத்துக்கு
உங்களுக்கு தோணும் ட்விட்ட எழுதி வச்சுட்டு
காலைல முதல் ட்விட்டா தட்டி விடுங்க
சாயங்காலம் 5 டூ 7 நைட் 9 டூ 11 க்கும் தட்டி விடுங்க

இதே டைம் ல கவனிக்கபடாத
உங்க பழைய ட்விட்ட நீங்களே RT பண்ணிவிடலாம்
பார்க்காத உங்க நண்பர்கள் அத பார்த்து RT பண்ண வாய்ப்பு இருக்கு

இப்போ கடைசி வழிய சொல்றேன்
இதுதான் இருக்கதுலையே ரொம்ப ரொம்ப ஈஸியான வழி
அது என்னனா

உங்க ட்விட்டுக்கு ரிப்ளே பண்றாங்களே
அவங்கள மதிச்சு நீங்களும் ரிப்ளே பண்ணனும்
அவங்க கூட பேச்சுலையே ட்ரைன் விட்டா
அந்த ட்விட் உங்க நண்பர்கள் TLலையே சுத்திட்டு இருக்கும்
அப்போ ட்விட் புடிச்சுருந்தா கண்டிப்பா RT பண்ணுவாங்க

இன்னும் நிறைய டிப்ஸ்
இப்போதைக்கு இத முயற்சி பண்ணுங்க
மத்தத இன்னொரு டூலா சொல்றேன்

அப்றோம் RT ய வச்சு அரிசி வாங்க முடியாது
நெட் பூஸ்டர் க்கு காசு கிடைக்காது

நல்ல நண்பர்களை சம்பாரிங்க
அவங்களால உதவி கிடைக்கலனா கூட
உங்க வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களாவது கிடைக்கும்
அனுபவத்தை விடவா பெரிய சொத்து நமக்கு வேணும்
இத முதல்ல எல்லாரும் உணரனும்

இருக்குற வரைக்கும் நட்ப நேசிங்க
RT க்காக போலியா பழகாம
நேர்மையா பழகுங்க
மத்தவங்களுக்கு நல்லதே நினைங்க
உங்களுக்கும் நல்லதே நடக்கும்

எனக்காக
இவ்ளோ நேரம் ஒதுக்கி
இத வாசிச்ச

உங்க அன்புக்கு ரொம்ப நன்றி _/\_

அன்புடன் கவிஞன் மோக்கியா என்ற ரமேஷ்

ட்விட்டரில் பிரபலமாவது எப்படி?

அன்பு தோழர்களே
அழகு தோழிகளே

ட்விட்டர் ல இருக்க எல்லாருக்கும்
நம்மளும் பிரபலம் ஆகணும்ங்ற ஆசை இருக்கும்.
பொண்ணுங்க ஈஸியா பிரபலம் ஆகிடுவாங்க (பேக் ஐடியா இருந்தாலும்)
அதுக்கு முழுக்காரணம் நம்மதான் அத தனியா வேற டூலா ல சொல்றேன்.

பசங்கள பொருத்தவரைக்கும் அவங்களோட
நரம்பு புடைக்கும் நல்ல கருத்து பதிவுகளை எல்லாரும்
பார்க்கனும்ன்னு நினைப்பாங்க ஆனா ஒருத்தனும் கண்டுக்க மாட்டான்.

ஆனா பொண்ணுங்க என்னா மொக்கை ட்விட் போட்டாளும்
அட ஹச்சுன்னு தும்முன்னா கூட என்ன ஆச்சு பேபி ன்னு
அவளை சுத்தி ஈ மாதிரி மொய்ப்பானுங்க
(என்னையும் சேர்த்துதான் சொல்றேன்)

இந்த மாதிரி ஆளுங்கள உங்க ட்விட்ட படிக்க வைக்கிறது ரொம்ப சுலபம்
ஆனா அதுக்கு கொஞ்சம் முயற்சியும் பயிற்சியும் தேவை அத பண்ணிட்டா நீங்களும் பிரபலம் ஆகலாம்.

அதுக்கு நான் சில டிப்ஸ் சொல்றேன் அத மட்டும் பண்ணுங்க

முதல்ல உங்களுக்கு பிடிச்ச நல்ல கதாபாத்திரம்
அது நாவல்கள்லா இருந்தாலும் சரி (வந்தியத்தேவன் மாதிரி)
சினிமால இருக்குற எதுவா இருந்தாலும் சரி (மோக்கியா மாதிரி)
வித்தியாசமான பெயரா இருக்கணும் அப்போதான் சீக்கிரம் ரீச் ஆகும்.
உங்களோட சொந்த பெயர கூட கொஞ்சம் வித்தியாசமா
ஸ்டைல் ஆ மாத்தி கேண்டில் நேம் ஆ வச்சுக்களாம்.

(பெயருக்கு ஏன் இவ்ளோ மெனக்கெடனும் ன்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது)
பெயர் தான் முக்கியம் மோடுமுட்டி, பச்சபுள்ள, உலகானந்தா,
இந்த மாதிரி பெயர பார்த்து பாலோ பண்ற ஆளுங்க நிறைய இருக்காங்க.

அடுத்து நல்ல DP CP நீங்க அழகா இருந்தா
உங்க DP CP வித்தியாசமா வச்சு பொண்ணுங்களுக்கு இம்சை கொடுக்கலாம். என்னை மாதிரி கேவலமான முகம் உள்ளவங்க
தயவுசெய்து சொந்த DP CP வைக்க வேண்டாம் ஏன்னா
பாலோ பண்ணனும்ன்னு நினைக்கிறவங்க கூட
அத பார்த்துட்டு பாலோ பண்ண மாட்டாங்க.
பிடிச்ச பிடிக்காத நடிகர்கள் போட்டோ வச்சா கூட ஓகே

(பின் குறிப்பு : சொந்த DP வச்சா மத்தவங்கள சுதந்திரமா கலாய்க்க முடியாது.
உங்க முகத்தை பார்க்காத வரைக்கும் உங்க ட்விட்டுக்கு மதிப்பு கொடுப்பாங்க)

அப்றோம் பிரபலாமானவங்கள முதல்ல பாலோ பண்ணனும்
அவங்க தினமும் என்ன ட்விட் போடுறாங்க
இன்னைக்கு என்ன டாப்பிக் பேசுறாங்கன்னு கவனிக்கணும்
அவங்க பேசுற டாப்பிக் சம்பந்தமா உங்களுக்கு தோணும் கருத்துக்களை அவங்க ட்விட் க்கு கீழயே எழுதலாம். இது அவங்க ட்விட்டுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறீங்கன்னு உங்கமேல நல்ல அபிப்பிராயம் உண்டாகும்.
அப்படி எழுதும்போது உங்க ட்விட் அவங்களுக்கு பிடிச்சு போச்சுன்னா
அத அவங்க RT அல்லது ரிப்ளே பண்ணிட்டா
அவங்களோட பாலோவர்ஸ் எல்லாரும் உங்க ட்விட்ட பார்ப்பாங்க
அதுனால சில பாலோவர்ஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கு
சம்பந்தமேயில்லாம நீங்களா தனியா கம்பு சுத்துனா எடுபடாது.

அடுத்து உங்களுக்கு தோணுற நீங்க படிச்ச கேட்ட பார்த்த சம்பவங்களை எழுதலாம் அதுல கொஞ்சம் காமெடி இருந்தா கண்டிப்பா எல்லாரும் ரசிப்பாங்க
RT பண்ணுவாங்க (அதுக்காக மொக்கை போட கூடாது)

எதுவும் எழுத தோணலையா? கொஞ்சநாளைக்கு
உங்களுக்கு பிடிச்ச ட்விட்டர் சினிமா அரசியல் பிரபலங்களை
பாலோ பண்ணலாம் அவங்களோட கருத்துக்களை RT பண்ணலாம்
ரிப்ளேக்களை பார்த்து அவங்க எப்படி பேசுறாங்கன்னு கத்துக்கலாம்
(அதுக்காக RT மட்டுமே பண்ணிட்டு இருக்க கூடாது
அது உங்கள பாலோ பண்றவங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்)

பெரிய பெரிய பிரபலங்கள் கிட்ட அடிக்கடி பேச்சு கொடுக்கணும்
முக்கியமா காப்பி பேஸ்ட் ட்விட் போடவே கூடாது
அப்படி பண்ணா உங்க ட்விட்டுக்கு மதிப்பு இல்லாம போய்டும்
அடுத்து நீங்க சுயமாவே சிந்திச்சு எழுதி இருந்தாலும்
அத காப்பி பேஸ்ட் ன்னு முத்திரை குத்திடுவாங்க
யாரும் உங்கள மதிக்க மாட்டாங்க
உங்களுக்கு ஒரு ட்விட் பிடிச்சுருந்தா அந்த கருத்தை மட்டும் எடுத்துகிட்டு
உங்க எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி அத மாத்தி எழுதலாம்.

முக்கியமான விஷயம் உங்க ட்விட்டுக்கு ரிப்ளே பண்றவங்க மதிக்கணும்
யாரையும் மதிக்காமலோ அவங்க ரிப்ளேவ பார்த்து கண்டுக்காமலோ
இருக்க கூடாது ஒரு ஆளோட பாலோவர்ஸ் எண்ணிக்கைய பார்த்து
பழக கூடாது அவங்களோட பேச்சு களை பார்த்து பழகணும்.

உங்க கண்ணுல படும் காமெடியான மீம் கள உடனே ஷேர் பண்ணனும்
அத ஏற்கனவே வேற ஒருத்தன் போட்டு இருந்தாலும்
உங்க பாலோவர்ஸ்களுக்காக அத நீங்க ஷேர் பண்ணனும்
மீம் கள ஷேர் பண்றதுல தப்பேயில்லை.

இன்னும் நிறைய இருக்கு அத அடுத்த டூலா ல சொல்றேன்
இப்போதைக்கு இது போதும்ன்னு நினைக்கிறேன்

நான் சொன்னத முயற்சி பண்ணி பாருங்க
நீங்களும் சுலபமா பிரபலம் ஆகலாம்

இவ்ளோநேரம் எனக்காக நேரம் ஒதுக்கி
இத படிச்ச உங்கள ஆணா இருந்தா கை குலுக்கியும்
பெண்ணா இருந்தா கட்டிபுடிச்சு கதறி கதறி அழனும்ன்னு தோணுது

இருந்தாலும் இணையத்துல முடியாதே

நன்றி மீண்டும் வருக!!

அன்புடன் கவிஞன் மோக்கியா என்ற ரமேஷ் _/\_